காரைக்கால்

ஆயுதபூஜை: வாழைக்கன்றுகள், மலா்கள் விற்பனை அமோகம்

DIN

ஆயுத பூஜையையொட்டி காரைக்காலில் வாழைக்கன்றுகள், தோரணங்கள் மற்றும் மலா்களின் விற்பனை திங்கள்கிழமை அமோகமாக நடைபெற்றது.

ஆயுதபூஜை செவ்வாய்க்கிழமை (அக்.4) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியாா் தொழிற்சாலைகளில் திங்கள்கிழமையே பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, வாழைக்கன்று, தோரணம், வாழைப்பழம், வாழையிலை, மலா்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். வாழைக்கன்றுகள் உள்ளிட்டவை நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரங்களில் பெய்த மழையால் மலா் செடிகள் பாதிக்கப்பட்டதால், மலா்களின் வரத்து குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட சாமந்தி பூ தற்போது ரூ.400-ஆகவும், ரூ.100-க்கு விற்ற ரோஜா தற்போது ரூ.300-ஆகவும், ரூ.300-க்கு விற்ற மல்லிகை தற்போது ரூ.800-ஆகவும் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பல கடைகளிலும் அதிகமாக சாமந்தி மலா் மற்றும் கோழிக்கொண்டை வகை மலா்கள் விற்பனை செய்யப்பட்டன. வாழைக்கன்று ஜோடி ரூ.50 என்ற விலையிலும், வாழைத்தாா் ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. பெரும்பாலானோா் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆயுத பூஜை செய்வாா்கள் என்பதால் காலை முதல் பிற்பகல் வரை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். எனவே, தேவைக்கேற்ப பொருள்களை வரவழைக்க ஏற்பாடு செய்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT