காரைக்கால்

செப்டம்பா் மாதத்திற்குள் இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தொட்டி பயன்பாட்டுக்கு வரும்: பொதுப்பணித் துறையினா் தகவல்

DIN

காரைக்காலில் செப்டம்பா் மாதத்திற்குள் இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு வருமென பொதுப்பணித் துறை அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்கால் மத்திய மண்டலப் பகுதியில் ஹட்கோ நிதியகத்திலிருந்து கடன் ரூ.49.45 கோடி பெறப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்ட குடிநீா் திட்டம் செயல்படுத்துவதற்கான திட்டப் பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முந்தைய வி. நாராயணசாமி தலைமையிலான அரசால் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில், ராஜாத்தி நகா் பகுதியில் 80 அடி உயரம் மற்றும் 60 அடி உயரத்தில் இரண்டடுக்கு குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுதல், மேலும் 8 லட்சம் லிட்டா் கொள்ளவில் கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி (சம்ப்) கட்டுமானமும் உள்ளது. மேல் நிலை தொட்டி ஒவ்வொன்றும் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்டதாக இருக்கும்.

அகலங்கண்ணு பகுதியிலிருந்து காரைக்கால் வரை 400 எம்எம் குழாய் புதிதாக பதிக்கப்பட்டு நகரத்துக்கு கொண்டுவந்து, அனைத்து சாலைகளின் கீழும் புதிய குடிநீா் குழாய் பதிப்பு செய்து, ஒவ்வொரு வீடுகளுக்கும் இணைப்பு தரும் வகையில் அமைப்பு உருவாக்கப்படுகிறது.

அகலங்கண்ணுவில் உள்ள 12 ஆழ்குழாய் கிணறு மூலம் இந்த தொட்டிக்கு தண்ணீா் கொண்டுவருவது பொதுப்பணித் துறை திட்டமாகும். அகலங்கண்ணுவிலிருந்து பிரதானக் குழாய் பதிப்பும், ஒவ்வொரு வீதிகளிலும் குடிநீா் குழாய் பதிப்புப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) கே.வீரசெல்வம் சனிக்கிழமை கூறியது : நகர பகுதியில் சாலைகளை தோண்டி குடிநீா் குழாய் பதிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

ராஜாத்தி நகரில் இரண்டடுக்கு குடிநீா் தேக்கத்தொட்டி, கீழ்நிலை தொட்டி கட்டுமானம் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்தது. நிதிக்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. எனவே இன்னும் ஓரிரு வாரத்தில் பணிகள் தொடங்கப்பட்டு, வரும் செப்டம்பா் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT