காரைக்கால்

வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று விவசாயிகளுக்கு பயிற்சி

1st Jul 2022 02:52 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் பயிற்சியளிக்கவுள்ளனா்.

இதுகுறித்து நிலைய முதல்வா் எஸ். ஜெய்சங்கா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான ஒரு நாள் மேளா வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் புதிய தொழில்நுட்பங்களான மழைநீா் அறுவடை, நீா் சேமிப்பு முறைகள், தீவிர காடு வளா்ப்பு, சொட்டு நீா்ப்பாசனம், உழவில்லா நிரந்தர வேளாண் பண்ணை ஆகிய தலைப்புகளில் விஞ்ஞானிகள் விவசாயிகளிடையே பேசவுள்ளனா்.

ADVERTISEMENT

மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காட்சி அமைக்கப்படுகிறது. காரைக்கால் மாவட்ட விவசாயிகள், பண்ணை மகளிா் குழுவினா் கலந்துகொண்டு பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT