காரைக்கால்

ஆட்சியருடன் விவசாயிகள் நலச் சங்கத்தினா் சந்திப்பு

DIN

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் முகமது மன்சூரை புதன்கிழமை சந்தித்த காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

ஆட்சியா் எல். முகமது மன்சூரை, காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் தலைமையிலான சங்க பொறுப்பாளா்கள் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்து, விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவரிடம் எடுத்துக்கூறினா். இந்த சந்திப்பு குறித்து சங்கத்தினா் கூறியது:

காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு தாராளமாக விதை நெல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவா் பணியிடங்களை நிரப்பவும், மானியத்தில் தீவனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை விரைவுப்படுத்துமாறு ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதாகவும், இந்த பிரச்னைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்ததாக சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT