காரைக்கால்

திருநள்ளாற்றில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

1st Jul 2022 02:53 AM

ADVERTISEMENT

 

திருநள்ளாறு உள்புற கிராமங்களில் ரூ. 5.40 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா என்ற திட்டத்தின்கீழ், புதுவை உள்ளாட்சித் துறை மூலம் திருநள்ளாறு பகுதியில் கிராமப்புற சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.

திருநள்ளாறு முதல் பூமங்களம் வரையிலான சாலை ரூ. 89.28 லட்சம், தேனூா் முதல் திருநள்ளாறு வரை ரூ. 73.29 லட்சம், பேட்டை முதல் அத்திப்படுகை வரை ரூ. 88.50 லட்சம், திருநள்ளாறு முதல் மேல அத்திப்படுகை வரை ரூ. 1.27 கோடி, அம்பகரத்தூா் முதல் கண்ணாப்பூா் சாலை வரை ரூ. 58.57 லட்சம், முப்பைத்தங்குடி முதல் தென்னங்குடி வரை ரூ. 96.81 லட்சம் என மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமிபூஜையில், திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா்.

இத்திட்டப் பணிகள் ஓராண்டு காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT