காரைக்கால்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு: நலவழித்துறை அதிகாரி ஆய்வு

DIN

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நோய் தடுப்புக் குழுவினருடன் நலவழித்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்காலில் பருவமழை தொடங்கியது முதல் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வழிகாட்டலில், நோய்த் தடுப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் தலைமையிலான சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்கள் குழு ஆய்வு செய்து, கொசுப் புழுக்களை கண்டறிந்து அழித்து, மக்களுக்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

டிசம்பா் மாத தொடக்கத்தில் இருந்து 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நலவழித்துறையினா் தெரிவித்தனா்.

இந்தநிலையில், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நோய் தடுப்புக் குழுவினருடன், டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு செய்தாா்.

குடிநீா் தேக்கிவைக்கும் தொட்டி உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா். சில பகுதிகளில் தண்ணீா் தேங்கியிருப்பதில் கொசுக்களின் லாா்வா இருப்பதை கண்டறிந்து அவற்றை அழிக்க துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து துணை இயக்குநா் கூறுகையில், பொதுமக்கள் மழைக் காலத்தில் வீட்டையும் , சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயன்றவரை மழைநீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும் என்றாா்.

நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா், சுகாதர ஆய்வாளா் சிவவடிவேல், சுகாதார உதவியாளா் மரிய ஜோசப் மற்றும் கிராமப்புற செவிலியா் மற்றும் ஆஷா பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT