காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை

DIN

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவதுபோன்று சிவ மற்றும் வைணவத் தலங்களில் சொக்கப்பனை கொளுத்தும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் தீப விளக்கு ஏந்தி மேள வாத்தியங்களுடன் கோயில் சந்நிதி முகப்பில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை இடத்துக்குச் சென்றனா். அங்கு சுவாமிகள் எழுந்தருளச் செய்யப்பட்டனா். பிறகு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் பகுதி வீழி வரதராஜ பெருமாள் கோயில், ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புதன்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தும் வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT