காரைக்கால்

புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரைக்கால் ரெட் கிராஸ் பாராட்டு: உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரைக்கால் ரெட் கிராஸ் பாராட்டு தெரிவித்துள்ளது.

காரைக்கால் ரெட் கிராஸ் ஆயுட் கால உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ரெட் கிராஸ் புதுவை மாநிலத் தலைவா் ஜி. லட்சுமிபதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ.அய்யனாா், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் முன்னாள் லயன்ஸ் ஆளுநரான பி. வெங்கட்ராமன், சி. ராசப்பா, பொறுப்பாளா்கள் டி. பால்ராஜ், ஆா். கலியமூா்த்தி ஆகியோா் பேசினா்.

ரெட் கிராஸ் காரைக்காலில் நடத்திய அனைத்து சேவைப் பணிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருவதற்காக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரரராஜனை பாராட்டி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருவதற்காக பாலு என்கிற பக்கிரிசாமி, ரெட் கிராஸ் நிகழ்ச்சிகள் நடத்த உதவும் அன்னை தெரஸா செவிலியா் கல்லூரி முதல்வா் (பொ) ஜெ.ஜெயபாரதி மற்றும் ஏ.பிரியாநேசம், ஏ. கனகவள்ளி ஆகியோருக்கும், சேவை நிகழ்ச்சிகளில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றும் அக்குபஞ்சா் மருத்துவா் என். மோகனராஜனுக்கும், தனது மாமியாரின் உடலை தானமாக விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய டி.ராஜலெட்சுமிக்கும், கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் முகாமுக்கு பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றிய சி.ராசப்பாவுக்கும் மற்றும் பல்வேறு சேவையில் ஈடுபட்டவா்களும் நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT