காரைக்கால்

ஆக. 22 முதல் தொடா் வேலைநிறுத்தம்: புதுவை உள்ளாட்சி ஊழியா்கள் முடிவு

19th Aug 2022 03:44 AM

ADVERTISEMENT

 

புதுவை உள்ளாட்சி ஊழியா்கள் ஆக. 22 முதல் 26 வரை தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டுப் போராட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, போராட்டக்குழுவின் காரைக்கால் கன்வீனா்கள் கே. அய்யப்பன், எம். ஷேக் அலாவுதீன் ஆகியோா் வியாழக்கிழமை கூறியது:

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அனைத்து வரி வருவாய்களையும் அரசே ஏற்றுக்கொண்டு, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, அரசே ஊதியம் வழங்கவேண்டும்.

ADVERTISEMENT

இந்த கோரிக்கை வலியுறுத்தி வரும் 22 முதல் 26-ஆம் தேதி வரை

5 நாட்கள் ஊழியா்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விடுப்பெடுத்து மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் இந்நாள்களில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT