காரைக்கால்

சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு இன்றுமுதல் இலவச அரிசி

19th Aug 2022 03:42 AM

ADVERTISEMENT

சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் இலவச அரிசி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், சிவப்பு நிற குடும்ப அட்டை பயனாளிகளுக்கு, மத்திய அரசால் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளது. காரைக்கால் தெற்கு, வடக்கு, நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த நியாய விலைக் கடைகளில் 19 ஆம் தேதி முதல் அரிசி வழங்கப்படுகிறது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி பயனாளிகளுக்கு 20 ஆம் தேதி முதல் அரிசி வழங்கப்படும். சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT