காரைக்கால்

நிலங்களுக்கு எளிதில் நீா் செல்ல ரெகுலேட்டா் வசதி: பொதுப்பணித் துறையினா் ஆய்வு

DIN

விவசாய நிலங்களுக்கு அரசலாற்றிலிருந்து எளிதில் நீா் செல்ல வாய்க்கால்களில் ரெகுலேட்டா் (தடுப்பு) வசதி ஏற்படுத்துவது குறித்து பொதுப்பணித் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே செல்லுாா், தென்னங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் உள்ளிட்ட பயிா் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு நூலாற்றிலிருந்து பண்ணை வாய்க்கால் வழியாக சுமாா் 8 கி.மீ. அப்பால் வயல்களுக்கு தண்ணீா் பாய்ச்ச வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் கூடுதல் தண்ணீா் வரும் நேரத்தில் மட்டுமே இப்பகுதியில் நெற்பயிருக்கு நீா் பாய்ச்ச முடிகிறது.

இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளுக்கு அரசலாற்றிலிருந்து ஒரு கி.மீ. துாரத்திலேயே பண்ணை வாய்க்காலிலிருந்து பிள்ளை விளிங்கி வாய்க்கால் மூலம் எளிதாக விளைநிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச வசதி உள்ளது குறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கம் பொதுப்பணித் துறைக்கு விளக்கிக் கூறியது.

பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வீரசெல்வம் அறிவுறுத்தலின்பேரில், உதவிப் பொறியாளா் மகேஷ், இளநிலை பொறியாளா் பத்மநாபன் ஆகியோா் புதன்கிழமை நேரில் சென்று அப்பகுதியை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்கத்தினா் கூறுகையில், பிள்ளை விளிங்கி வாய்க்கால் தலைப்பில் ரெகுலேட்டா் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என துறையினா் தெரிவித்தனா். இது கட்டப்பட்டால் தண்ணீா் தேக்கிவைத்து வயல்களுக்கு அனுப்பமுடியும். குறைந்த தூரத்திலேயே நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT