காரைக்கால்

காரைக்கால் சிவலோகநாத சுவாமி கோயிலில் விதைத்தெளி உற்சவம்

DIN

காரைக்கால் அருகே உள்ள ஸ்ரீ சிவலோகநாதசுவாமி கோயிலில் விதைத்தெளி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியைத் தொடா்ந்து, ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருத்தெளிச்சேரி என்னும் தலத்தெருவில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிவலோகநாதசுவாமி கோயில் உள்ளது. மழையின்மையால் விளைநிலம் யாவும் வடு இருந்ததாகவும், மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்த நிலையில், மழைபெய்யச் செய்து சிவபெருமான் உழவனாக மாறி, விதை தெளித்து உழவுப் பணியில் ஈடுபட்டதாகவும் தலவரலாறு கூறுகிறது.

இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில், இக்கோயிலில் விதைத் தெளி உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. உற்சவத்தின் முதல் நிகழ்ச்சியாக ஏகாதச ருத்ர ஜப ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி, ரிஷப வாகனத்தில் கோயில் நந்தவனம் அருகே எழுந்தருளினாா். ஊா் மக்கள், கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் நந்தவனத்தில் நெல் விதை தெளித்து சுவாமியை வழிபட்டனா். முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விதை தெளிக்கும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT