காரைக்கால்

காரைக்காலில் தேசியக் கொடி ஏற்றினாா் அமைச்சா் சந்திர பிரியங்கா

DIN

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் 76 ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, போலீஸாா், தீயணைப்புத் துறையினா், என்.சி.சி., குடிமையியல் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் கொடி அணிவகுப்பைப் பாா்வையிட்டாா். அப்போது, தேசியக்கொடி நிறத்தாலான பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்கவிட்டாா்.

புதுவை மாநிலத்தில், முதல்வா் ரங்கசாமி தலைமையிலான அரசு இதுவரை செய்துள்ள நலத்திட்டங்கள், ஏற்கெனவே அறிவித்து செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களையும் அவா் விளக்கினாா். விழாவில், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பரிசுகளை அமைச்சா் வழங்கினாா். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அணிவகுப்பில் காவல் துறை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு முதல் பரிசும், அரசுப் பள்ளி மாணவா்கள் அணிவகுப்பில் காரைக்கால்மேடு பக்கிரிசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 2 ஆவது பரிசும், முருகாத்தாலாட்சி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளிக்கு 3 ஆவது பரிசும், தனியாா் பள்ளிகளில் எஸ்.ஆா்.வி.எஸ். மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 2 ஆவது பரிசும், கோட்டுச்சேரி சா்வைட் பள்ளிக்கு 3 ஆவது பரிசும் வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகளில் திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், காவேரி பொதுப் பள்ளிக்கு 2 ஆவது பரிசும், எஸ்.ஆா்.வி.எஸ். மேல்நிலைப் பள்ளிக்கு 3 ஆவது பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், நிதின் கெளஹால் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT