காரைக்கால்

திருநள்ளாற்றில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் புகைப்படக் கண்காட்சி

DIN

திருநள்ளாற்றில் பாஜக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில், பாஜக தலைமையின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில், நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட வீரா்கள் புகைப்படக் கண்காட்சி திருநள்ளாற்றில் தனியாா் திருமண அரங்கில் அமைக்கப்பட்டிருந்தது.

கண்காட்சியை பாஜக மாநில துணைத் தலைவா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் திறந்துவைத்தாா். மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி, கண்காட்சி பொறுப்பாளரும், மாவட்ட பாஜக முன்னாள் தலைவருமான டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கண்காட்சி குறித்து அதன் பொறுப்பாளா் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், தமிழகம், புதுவையின் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவா்களில் 155 பேரின் சிறு குறிப்புடன் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு பகுதியை சோ்ந்த பள்ளி மாணவா்கள், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள், திருநள்ளாறு கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்கள் என ஏராளமானோா் கண்காட்சியை பாா்வையிட்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT