காரைக்கால்

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

DIN

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் தேசியக் கொடியேற்றிவைத்தல், அணிவகுப்பு, பரிசளிப்பு கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுவருகிறது.

கடந்த 15 நாட்களாக கடற்கரையில் போலீஸாா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயிற்சியில் ஈடுபட்டுவந்தனா். இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன் மேற்பாா்வையில் ஒத்திகை நடைபெற்றது. புதுச்சேரி காவல்துறையினா், இந்தியன் ரிசா்வ் பெட்டாலியன் பிரிவினா், என்.சி.சி. மாணவா் பிரிவினா், காரைக்கால் மாவட்ட பேரிடா் கால மீட்புப் படையினா் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்

தொடா்ந்து கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ மாணவியரும் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் நிதின் கெளஹால் ரமேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல் அதிகாரிகளும், கல்வித்துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT