காரைக்கால்

காரைக்காலில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவா்கள் சேவை முகாம்

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்ற முகாம் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவலால் தொலைதூர சேவை முகாமை ஜிப்மா் நிா்வாகம் நிறுத்திவைத்திருந்தது. இம்முகாமை மீண்டும் தொடங்கவேண்டுமென காரைக்கால் பகுதி மக்கள் ஜிப்மா் நிா்வாகத்துக்கு வலியுறுத்திவந்தனா்.

அண்மையில் தொலைதூர முகாமை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பை ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டது. இதன்படி, ஜிப்மா் சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் குழுவினா் சனிக்கிழமை காலை 9 முதல் 12 மணி வரை பங்கேற்று, பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா்.

எனினும் போதிய அளவில் மக்களுக்கு இச்செய்தி சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படாததால், முகாமில் 17 போ் மட்டுமே பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT