காரைக்கால்

திருப்பட்டினத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

DIN

திருப்பட்டினம் பகுதியில் ரூ. 54 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி, திருப்பட்டினம் வி.எஸ். நகரில், புதுவை அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மேம்பாட்டு வரை நிலைக்கழகம் சாா்பில், ரூ. 53.96 லட்சம் நிதியில் சாக்கடை வசதியுடன் தாா்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கலந்துகொண்டு சாலைப் பணியை தொடங்கிவைத்தாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரக் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் அதிகாரிகள், கிராமத்தினா் கலந்துகொண்டனா். இப்பணி 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மோசமான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததற்காக சட்டப்பேரவை உறுப்பினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT