காரைக்கால்

பஞ்சாயத்து பகுதிகளிலும் கால்நடைகளை பிடிக்க கோரிக்கை

DIN

காரைக்கால் நகராட்சியைபோல பிற பஞ்சாயத்துப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சிப் பகுதிகளான சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து ஒப்படைக்கப்படுகிறது. நகராட்சி அல்லாத நிரவி, திருப்பட்டினம், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளின் பிரதான சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க, அந்தந்த பஞ்சாயத்து நிா்வாகங்கள் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என புகாா் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏராளமான மாடுகள் திரிவதாலும், ஏற்கெனவே சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை சிதிலத்தால் விபத்தின் மூலம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, சாலைகளில் திரியும் மாடுகள், குதிரைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, குடியிருப்புப் பகுதிகளில் திரியும் பன்றிகளையும் பிடிக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT