காரைக்கால்

அப்துல் கலாம் பிறந்தநாள்: காரைக்கால் புறவழிச் சாலையில் மரக்கன்று நடும் பணி

DIN

காரைக்காலில் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, புறவழிச் சாலையோரத்தில் ஆட்சியா் முன்னிலையில் பனை விதைக்கப்பட்டது.

புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பிரிசம் ஜான்சன் நிறுவனம் இணைந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி, காரைக்கால் பகுதி கலைஞா் மு. கருணாநிதி புறவழிச் சாலையோரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தின.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சாலையோரத்தில் பனை விதைகளை விதைக்கும் பணியை தொடங்கிவைத்தாா். நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பினா் முன்னின்று 300-க்கும் மேற்பட்ட விதைகளை விதைத்தனா்.

மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் வழக்குரைஞா் திருமுருகன், மாநிலச் செயலாளா் சிவகுமாா் மற்றும் நிறுவன மேலாளா் ஆனந்தராஜ் மற்றும் நடராஜ், நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளா்கள் ராஜதுரை, சுமதி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT