காரைக்கால்

குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

திருநள்ளாறு அருகே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சேத்துாரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. திருநள்ளாறு - கும்பகோணம் செல்லும் மிக முக்கியமான சாலையாகவும், அம்பகரத்துாா், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் உள்ளிட்ட கோயில்களுக்கு வந்து செல்லும் சாலையாகவும் உள்ளது. இந்த சாலையோரத்தில் சேத்துாரில் பல மாதங்களாக குப்பைகள் அகறப்படாமல் குவிந்து கிடக்கிறது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குப்பைகளில் நீா் தேங்கி உள்ளது. மேலும், துா்நாற்றம் வீசி தொடங்கியுள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்கூறியது:

இங்கு கொட்டப்படும் குப்பைகளை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் அகற்றுவது கிடையாது. இதுகுறித்து பலமுறை கொம்யூன் பஞ்சாயத்து கவனத்துக்கு கொண்டுச் சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கொசு உற்பத்தி ஆவதுடன், துா்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமப்படுகிறனா்.

தற்போது டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்த்தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே, குப்பைகளிலிருந்து நோய் பரவும் முன் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT