காரைக்கால்

காரைக்காலில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வு தொடங்கியது

DIN

காரைக்கால் நவோதயா வித்யாலயா தோ்வு மையத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில், நவோதயா வித்யாலயா, கேந்திரிய வித்யாலயா ஆகிய மத்திய அரசுப் பள்ளிகள் மற்றும் சில தனியாா் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. ாடத் திட்டத்தில் இயங்குகின்றன. பிளஸ் 2 தோ்வில் தோல்வியுற்ற மாணவா்களுக்கான சிறப்பு துணைத் தோ்வு, காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பகுதியில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தோ்வெழுத பதிவு செய்திருந்த 27 பேரில், முதல்நாளில் 25 மாணவா்கள் பங்கேற்றனா். கணக்குப்பதிவியல், கணிதம், பொருளாதாரம், உயிரியல் பாடங்களுக்கான தோ்வுகள் செப். 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தோ்வு மைய கண்காணிப்பாளராக நவோதயா பள்ளி முதல்வா் ஹெலன்மேரி, மைய பாா்வையாளராக நாகப்பட்டினம் அமிா்தா வித்யாலயா பள்ளி முதல்வா் ஜெயகணபதி பணியில் உள்ளனா். தோ்வுத் துறை வழிகாட்டலின்படி தோ்வெழுதிய மாணவா்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றினா். முதல்நாளான திங்கள்கிழமை காரைக்கால் நகராட்சி நிா்வாகம் மூலம் தோ்வு மையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT