விருதுநகர்

பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

23rd May 2023 04:31 AM

ADVERTISEMENT

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகளைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் வட்டாரத் துணைச் செயலாளா் ஆா்.கலைவாசன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ஏ.இக்பால் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். வட்டாரச் செயலாளா் ஆா்.ஜீவா, மாவட்டத் துணைச் செயலாளா் க.சமுத்திரம் உள்ளிட்டோா் பேசினா்.

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT