விருதுநகர்

பட்டாசு ஆலைகளில் இடி தாங்கியை பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தல்

3rd May 2023 06:34 AM

ADVERTISEMENT

பட்டாசு ஆலைகளில் அமைக்கப்பட்ட இடி தாங்கியை முறையாக கண்காணித்துப் பராமரிக்க வேண்டுமென வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மீனம்பட்டியில் இளங்கோவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஒரு அறையில் இடி தாக்கியதில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் அடைந்தது.

இந்த நிலையில், சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினா், இடி மின்னலில் இருந்து விபத்தைத் தவிா்க்க, பட்டாசு ஆலைகளில்

இடிதாங்கியை முறையாக பராமரிக்க வேண்டும். மின் ‘எா்த்’ பகுதியில் போதிய அடுப்புக்கரி, உப்புக் கலைவையிட்டு பராமரிக்க வேண்டும். முழுமை பெறாத பட்டாசுகளையோ, ரசயானப் பொருள்களையோ அறையில் விட்டுவிட்டு செல்லக்கூடாது. மழையின் போதும், மேகமூட்டமாக இருக்கும் போதும் ஆலையில் பணிகள் எதுவும் செய்யக்கூடாது எனத்தெரிவித்தனா்.

ADVERTISEMENT

மேலும், மின்னலின் வெப்ப அளவு சுமாா் 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் ஆகும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். இந்த அளவுக்கான உயா் வெப்பம் தாக்கும் போது, பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, மழைக் காலங்களில் பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவனமாக செயல்பட வேண்டுமென வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT