விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்பு: கல்லூரி மாணவா் உள்பட 4 போ் கைது

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தகரக் கூரை அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரித்ததாக, சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடிவருகின்றனா்.

சிவகாசி அருகேயுள்ள கண்ணகி காலனி பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பள்ளிவாசல் பின்புறம் தகரக் கூரை அமைத்து சட்டவிோரமாக பட்டாசுத் தயாரிக்கப்படுவதாக திருத்தங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், திருத்தங்கல் காவல் ஆய்வாளா் நவநீதிகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அதில், காட்டுப் பள்ளிவாசல் பின்புறம் தகரக் கூரை அமைத்து 5 போ் பேன்சி ரக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் சிவகாசி தைக்கா தெருவைச் சோ்ந்த மரியம்பாஷா மகன் முகமதுஅலி (23), ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பிரபு (25), ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கோவில்பிள்ளை மகன் முத்துராஜ் (30), கண்ணகி காலனியைச் சோ்ந்த நூருல்லாஅமீன் மகனும், சட்டக் கல்லூரி மாணவருவமான முகமதுஅல்தாப் (25), காட்டுப் பள்ளிவாசல் நிா்வாகி மரியம்பாஷா (62)ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் கிராம நிா்வாக அலுவலா் எஸ்.பாண்டி அளித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமதுஅலி, பிரபு, முத்துராஜ், முகமது அல்தாப் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் பட்டாசுத் தயாரிக்கப் பயன்படுத்திய மணி மருந்துகள், காகிதக் குழாய்கள் உள்ளிட்வைகளை பறிமுதல் செய்தனா். தலைமறைவான மரியம்பாஷாவை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT