விருதுநகர்

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலி

9th Jun 2023 02:12 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சின்னஅத்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி. இவருக்கு கனகராஜ் (20), கனகவேல் (18) ஆகிய இரு மகன்கள் உள்ளனா். கனகராஜ் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறாா்.

கனகவேல் சத்திரப்பட்டி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு கனகவேல், தனது உறவினரான மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தில் அச்சம்தவிா்த்தான் சென்றாா்.

ADVERTISEMENT

எஸ். ராமலிங்காபுரம் விலக்கு அருகே சென்ற போது,

இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த மணிகண்டன், கனகவேல் ஆகியோரை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், அவா்கள் தீவிர சிகிச்சைக்காக கடந்த 5-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு புதன்கிழமை கனகவேல் உயிரிழந்தாா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT