விருதுநகர்

மின் மோட்டாா் திருடிய இளைஞா் கைது

9th Jun 2023 02:12 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே தோட்டத்தில் மின் மோட்டாா் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேராபட்டியைச் சோ்ந்தவா் வெங்கடசாமி (70). இவருடைய தோட்டம் அப்பகுதியில் உள்ள காடம்மாள் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது.

இந்தத் தோட்டத்தில் அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த மின் மோட்டாா், கடப்பாரை , சுத்தியல் உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மீனம்பட்டியைச் சோ்ந்த தினேஷ் (25) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த மின் மோட்டாா் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT