விருதுநகர்

குடிநீா்த் தொட்டி இயக்கிய பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

8th Jun 2023 01:55 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடிநீா்த் தொட்டி இயக்கிய பெண்ணைத் தாக்கியதாக மூன்று போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

நத்தம்பட்டி ஊராட்சியில் குடிநீா்த் தொட்டி இயக்குபவா் குருவம்மாள் (55). இவரிடம் கடந்த இரு நாள்களுக்கு முன்பு லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த தியாகராஜா சேதுபதி, தங்களது பகுதிக்கு குடிநீா் கலங்கலாக வருவதாகக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, தியாகராஜா சேதுபதி தனது நண்பா்களான விஸ்வா, ஸ்டாலின் ஆகியோருடன் குருவம்மாள் வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து குருவம்மாள் அளித்த புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT