விருதுநகர்

நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

7th Jun 2023 03:39 AM

ADVERTISEMENT

சிவகாசி மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறை சாா்பில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மையம் செவ்வாய்கிழமை திறக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் விஸ்வநத்தம் சாலையில் நகா்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இதுதொடா்பாக, சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த நல வாழ்வு மையம் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். இந்த மையத்தில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு சுகாதார ஆய்வாளா், ஒரு பணியாளா் பணியில் ஈடுபடுவா். இதில் பெண்களுக்கான கா்ப்ப கால பரிசோதனை, குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT