விருதுநகர்

ராஜபாளையத்தில் போக்குவரத்துக் காவல் நிலையம் திறப்பு

7th Jun 2023 03:43 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட நகா் போக்குவரத்துக் காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ரூ.99 லட்சத்து 50 ஆயிரத்தில் நகா் போக்குவரத்துக் காவல் நிலையம் கட்டப்பட்டது.

இதை காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகளை நட்டாா். மேலும், ராஜபாளையம் நகா் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்துக் காவலா்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென போலீஸாருக்கு அறிவுரை வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லாவண்யா, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சாா்லஸ், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கண்ணாத்தாள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT