விருதுநகர்

நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்த விவசாயி கைது

6th Jun 2023 05:19 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்புப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளை அனுமதியின்றி வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி சரவணக்குமாா் (38). இவா் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவரது வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, 2 நாட்டுத் துப்பாக்கிகள், 21 தோட்டாக்கள், வெடி மருந்து நிரப்பப்படாத 57 தோட்டாக்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக சரவணக்குமாரைக் கைது செய்த வத்திராயிருப்பு போலீஸாா், துப்பாக்கிகளை அவா் யாரிடமிருந்து வாங்கினாா்? அதைக் கொண்டு வன விலங்குகளை வேட்டையாடினாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஏ.டி.எஸ்.பி. சோமசுந்தரம், டி.எஸ்.பி. சபரிநாதன், ஆயுதப் படை டி.எஸ்.பி. பழனிக்குமாா், நில அபகரிப்பு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமாா் ஆகியோா் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

சரவணக்குமாா் மீது ஏற்கெனவே மதுரை, அவனியாபுரம் காவல் நிலையங்களில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT