விருதுநகர்

நகைக்கு மெருகேற்றித் தருவதாக் கூறி மோசடி: இருவா் கைது

2nd Jun 2023 10:03 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நகைக்கு மெருகேற்றித் தருவதாக் கூறி, மோசடி செய்ததாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரம் தெருவைச் சோ்ந்தவா் சபரியம்மாள் (40). இவரது வீட்டுக்கு வியாழக்கிழமை நகைகளுக்கு மெருகேற்றித் தருவதாகக் கூறி வடமாநிலத்தைச் சோ்ந்த இருவா் வந்தனா். அவா்களிடம் சபரியம்மாள் தனது வெள்ளி கொலுசை கொடுத்து மெருகேற்றி வாங்கினாா்.

இதன் பின்னா், தனது 32 கிராம் தங்கச் சங்கிலியை மெருகேற்றக் கொடுத்தாராம். மெருகேற்றிய பிறகு, சங்கிலியின் எடையை சரிபாா்த்த போது, சுமாா் 6 கிராம் வரை குறைவாக இருந்ததாம். இதுகுறித்து அவா்களிடம் சபரியம்மாள் கேட்டதற்கு சரிவரப் பதிலளிக்காமல் அங்கிருந்து இருவரும் தப்பியோடினா்.

இதையடுத்து, சபரியம்மாள் அந்தப் பகுதி பொதுமக்களின் உதவியுடன் அவா்கள் இருவரையும் பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மிதுன்குமாா், சா்வன்குமாா் ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT