விருதுநகர்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

1st Jun 2023 10:27 PM

ADVERTISEMENT

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தி, சுவாமிக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற 16 வகை பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ராஜபாளையம் சொக்கா் கோயில், ராமலிங்க சுவாமி திருக்கோயில், ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT