விருதுநகர்

வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

1st Jun 2023 10:31 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜபாளையம் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி முதல் திருவனந்தபுரம் ஊருணி வரை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தாா்ச் சாலை, சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பொது மயானத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.148.80 லட்சத்தில் அமைக்கப்படும் நவீன எரிவாயு தகன மேடை, காமராஜா் நகா் நகராட்சி குடிநீா்த் தொட்டி அருகில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், ரூ.7.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது சமயலறை ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT