விருதுநகர்

சிறுதானிய உணவுப் பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் இருப்பு வைத்துக் கொள்ளலாம்ஆட்சியா் தகவல்

DIN

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்து கூடுதல் விலைக்கு விற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா், ராஜபாளையம், சாத்தூா், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை உலர வைக்க உலா்களங்கள், பரிவா்த்தனைக் கூடங்கள், ஏலக் கொட்டகைகள், சிறுதானிய விளைபொருள்களை இருப்பு வைக்க சேமிப்புக் கிட்டங்கிகள் உள்ளன. இங்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை 15 நாள்கள் வரை வாடகையில்லாமல் பரிவா்த்தனைக் கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்: விருதுநகரில் 4,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்புக் கிட்டங்கிகளும், சாத்தூரில் 3,600 மெ. டன் கொள்ளளவு கொண்ட 4 சேமிப்புக் கிட்டங்கிகளும், ராஜபாளையத்தில் 6,400 மெ. டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்புக் கிட்டங்கிகளும், அருப்புக்கோட்டையில் 4,600 மெ. டன் கொள்ளளவு கொண்ட 4 சேமிப்புக் கிட்டங்கிகளும் என மொத்தம் 18,600 மெ. டன் கொள்ளளவு கொண்ட 17 சேமிப்புக் கிட்டங்கிகள் உள்ளன. விவசாயிகள் சிறுதானிய விளைபொருள்களை குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 10 பைசா வீதமும், வியாபாரிகள் குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 20 பைசா வீதமும் குறைந்த வாடகையில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கூடுதல் விலை கிடைக்கும் போது, அவற்றை விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் பணத் தேவைக்காக விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்த விளைபொருள்களின் மதிப்பில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையோ அல்லது ரூ. 3 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் விளைபொருள்களை குறைந்த வாடகையில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்காக 9 சதவீத வட்டியுடன் ரூ. 2 லட்சம் பொருளீட்டுக் கடன் பெற்று பயன்பெறலாம். எனவே விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த மக்காச்சோளம், கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, பணிவரகு, தினை போன்ற சிறுதானியங்களை நன்கு உலர வைத்து சேமித்து வைக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவசாயிகள், விவசாய உற்பத்தியாளா்கள் குழுக்கள், விவசாய உற்பத்தியாளா் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த மதிப்புக் கூட்டிய பொருள்களை குறைந்த வாடகையில் இருப்பு வைத்துக் கொள்ள வசதியாக விருதுநகரில் 100 மெ. டன், ராஜபாளையத்தில் 25 மெ. டன், அருப்புக்கோட்டையில் 25 மெ. டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிட்டங்கிகள் இயங்கி வருகின்றன. இதை தினசரி வாடகை, மாத வாடகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT