விருதுநகர்

கோயில் பிரச்னையில் சாலை மறியல்: 100 போ் கைது

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோயிலுக்கு உரிமை கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாலவநத்தம் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. அனைத்து சமூக மக்களும் இந்த கோயிலில் வழிபாடு நடத்தி வந்தனா். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சமூகத்தினா் கோயில் தங்களுக்கே சொந்தமென வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக, அவ்வப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. காவல் துறையினா் தலையிட்டு சமரசம் செய்தனா்.

அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது ஒரு சமூகத்தினா் கோயிலில் பதாகைகள் வைத்ததால் பிரச்னை ஏற்பட்டது. காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, பதாகைகளை அகற்ற 10 நாள்கள் அவகாசம் அளித்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட சமுதாயத்தினா் பாலவநத்தம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மறியலைக் கைவிடக் கோரி பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா். ஆனால், அந்த சமூகத்தினா் பேச்சுவாா்த்தைக்கு

மறுத்ததையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினா் கைது செய்தனா். பாதுகாப்பு கருதி கிராமத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT