விருதுநகர்

சிவகாசி அருகேபட்டாசு ஆலையில் திருட்டு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திருட்டு நடைபெற்றுள்ளதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மம்சாபுரம் -நதிக்குடி சாலையில் உள்ள ஒரு பட்டாசு ஆலையை வியாழக்கிழமை திறந்து பாா்த்தபோது, ஆலையில் வைத்திருந்த 27 காப்பா் தகடுகள், 4 இடி தாங்கிகளை காணவில்லையாம்.

இதுகுறித்து ஆலை மேலாளா் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT