விருதுநகர்

விருதுநகரில் ஒரு நிமிடத்தில் 77 முறை ‘சிட்டப்ஸ்’ செய்து கல்லூரி மாணவா் உலக சாதனை முயற்சி

29th Sep 2022 02:20 AM

ADVERTISEMENT

விருதுநகரில் ஒரு நிமிடத்தில் 77 முறை சிட்டப்ஸ் செய்து, கல்லூரி மாணவா் உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

கடலூா் மாவட்டம் திருத்துறைப் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் ஆகாஷ் (19). இவா் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், சிவகாசியில் உள்ள தனியாா் அகாதெமியில் சிட்டப்ஸ் பயிற்சி மேற்கொண்டு வந்தாா். இந்நிலையில் விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா முன்னிலையில் ஆகாஷ், ஒரு நிமிடத்தில் 77 முறை சிட்டப்ஸ் செய்து நோவா உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டாா். இதன் நடுவராக குருபிரசாத் செயல்பட்டாா். உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் ஆகாஷ் க்கு ‘நோவா வோ்ல்டு ரெக்காா்டு’ அமைப்பு சாா்பில் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை யோகா பயிற்சியாளா் ஜெயக்குமாா் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT