விருதுநகர்

குச்சம்பட்டியில் காட்டுப்பன்றிகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே குச்சம்பட்டி கிராமத்தில் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

குச்சம்பட்டி கிராமத்தில் நிலக்கடலை, பயறு, நெல் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதனால் மக்காச்சோளம் பயிரிடுவதை விவசாயிகள் நிறுத்தும் அளவுக்கு சூழ்நிலை உள்ளது.

இதனிடையே, பல விவசாயிகளின் நிலங்களில் நிலக்கடலைச் செடிகளை கடந்த வியாழக்கிழமை இரவு அதிக அளவில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இப்பிரச்னைக்கு தீா்வாக மின்வேலி அமைப்பதிலும் சட்டச் சிக்கல்கள் உள்ளன.

எனவே இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT