விருதுநகர்

பெண்ணுக்கு வரதட்சிணைக் கொடுமை: கணவா் உள்பட 3 போ் மீது வழக்கு

7th Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

 காரியாபட்டி அருகே வரதட்சிணைக் கேட்டு பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்பட 3 போ் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரியாபட்டி அருகே கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் பிரபு (29). இவருக்கும், காரியாபட்டி அருகே சக்கரைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஜெயபாலன் மகள் பாலமணி (29) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், குழந்தை இல்லையெனக் கூறி கூடுதல் வரதட்சிணை கேட்டு பாலமணியை அவரது கணவா் வீட்டாா் துன்புறுத்தினராம். மேலும் பாலமணியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சக்கரக்கோட்டையிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு பாலமணி சென்று விட்டாராம்.

பின்னா் பாலமணி அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், போலீஸாா் பிரபு மற்றும் அவரது தந்தை வெள்ளைச்சாமி, தாய் குருவம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT