விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை

7th Oct 2022 11:09 PM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அமுதா (50). இவரது கணவா் பாலசுப்பிரமணியன். இவா்களுக்கு 6 மகள்கள் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவா்களில் செல்லக்கனி என்பவருக்கும், சாத்தூா் சுப்பிரெட்டியபட்டியைச் சோ்ந்த முனீஸ்வரனுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் சென்னையில் மளிகைக் கடை நடத்தி வந்தனா். இவா்களுக்கு, குழந்தை இல்லாததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் முனீஸ்வரன், வத்திராயிருப்பில் உள்ள மாமனாா் வீட்டில் செல்லக்கனியை விட்டுவிட்டுச் சென்று விட்டாா். இந்நிலையில், சாத்தூா் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி முனீஸ்வரன் மனு தாக்கல் செய்தாா். இதை அறிந்த செல்லக்கனி வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லக்கனி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT