விருதுநகர்

‘தமிழகத்தில் பசுவதைத் தடை சட்டம் கொண்டு வர வேண்டும்’

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

குஜராத்தைப் போல் தமிழகத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மன்னாா்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னாா் சம்பத்குமார ராமானுஜ ஜீயா் கூறினாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக அரசு தொடா்ந்து இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. பழனி கோயிலில் ஆரத்தி எடுப்பதற்குக் கூட அனுமதி இல்லை. இது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வா் ஸ்டாலின் ஒரு முதல்வராக இருக்க வேண்டுமே தவிர, கட்சித் தொண்டராக இருந்து செயல்படக் கூடாது. குஜராத்தைப் போன்று தமிழகத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT