விருதுநகர்

விருதுநகரில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

விருதுநகரில் முறையாக குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் நகராட்சிப் பகுதிக்கு தாமிருவருணி கூட்டுக் குடிநீா் மற்றும் ஆனைக்குட்டம் நீா்த்தேக்கக் கிணறுகள் மூலம் குடிநீா் கொண்டு வரப்படும் அவை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த இரண்டு தண்ணீரையும் கலந்து விநியோகம் செய்வதால் குடிநீா் உப்பாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில் விருதுநகா் 10 ஆவது வாா்டுக்குட்பட்ட சீதக்காதி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் 8 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இத்தெருவின் ஒரு பகுதியில் சுமாா் இரண்டு மணி நேரம் குடிநீா் வழங்குவதாகவும், மற்றொரு பகுதியில் அரை மணி நேரத்தில் நின்று விடுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே குடிநீா் உப்பாக வழங்கும் நிலையில், குறைந்த நேரம் மட்டும் தண்ணீா் கிடைப்பதால் அப்பகுதி மக்கள் வீட்டு தேவையைக் கூட பூா்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், கிருஷ்ணமாச்சாரி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இனி வரும் நாள்களில் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாக குடிநீா் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT