விருதுநகர்

பாளையம்பட்டி மின்வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தல்

25th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மின்வாரியக் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பாளையம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மின்வாரியக் குடியிருப்பில் சுமாா் 500க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆனால் இப்பகுதியில் உள்ள வீதிகளில் வாருகால் வசதி, சாலை வசதி, தேவைக்கேற்ப மின்விளக்குள் ஆகியவை இல்லை. மழைக்காலத்தில் சாலை வசதியும் வாருகால் வசதியும் இல்லாததால் மழை நீா் வெளியேற வழியின்றி வீதிகளில் தேங்கி சேறும் சகதியுமாகி விடுகின்றன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் வீதியில் மின்விளக்குகள் அங்கென்றும் இங்கொன்றுமாக இருப்பதால் எப்போதும் வீதிகள் இருளடைந்துள்ளன. எனவே இக்குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT