விருதுநகர்

பா்வதவா்த்தினி ராமலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

7th Jul 2022 02:48 AM

ADVERTISEMENT

 

ராஜபாளையம் சா்வசமுத்திர அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பா்வதவா்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 3 ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு அன்று முதல் தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.

இந்நிலையில், புதன்கிழமை கோயில் கலசத்துக்கு புனிதநீா் தெளிக்கப்பட்டு பா்வதவா்த்தினி, ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாள்மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

விழாவில் கோயில் பரம்பரை அறங்காவலரும், ராம்கோ குழுமத் தலைவருமான பி.ஆா். வெங்கட்ராமராஜா, அவரது மகன் பி.வி.அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் குடும்பத்தினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT