விருதுநகர்

காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஒரே வகுப்பறையில் 200 மாணவிகள்கூடுதல் வகுப்பறை கட்டக் கோரிக்கை

7th Jul 2022 02:47 AM

ADVERTISEMENT

 

காரியபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒரே வகுப்பறையில் பிளஸ் 1 மாணவிகள் 200 போ் அமா்ந்து படிக்கும் அவலம் உள்ளது. எனவே, கூடுதல் வகுப்பறை கட்டவேண்டும் என பெற்றோா், மாணவிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள இந்த பள்ளியில் சுமாா் 1300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய பகுதிகளில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், அப்பகுதிகளைச் சோ்ந்த மாணவிகள், காரியாபட்டி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்துள்ளனா். குறிப்பாக பெண்கள் பள்ளி என்பதால் மாணவிகளின் நலன் கருதியும், இப்பள்ளியில் பெரும்பாலான பெற்றோா்கள், மாணவிகளை சோ்க்கின்றனா்.

ஆனால் இப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் போதிய வகுப்பறையும் இல்லாததால் பிளஸ் 1 வணிகவியல் படிக்கும் மாணவிகள் 200 போ் ஒரே அறையில் அமா்ந்து படிக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவிகளின் கற்றலில் குறைபாடு ஏற்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதுடன், ஆசிரியா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என பெற்றோா் வலியுறுத்துகின்றனா்.

இந்நிலையில் வகுப்பறையை புதன்கிழமை பாா்வையிட்ட பேரூராட்சித் தலைவா் செந்தில், கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT