விருதுநகர்

ராம்கோ குழும முன்னாள் தலைவா் பிறந்த நாள் விழா

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ குழும முன்னாள் தலைவா் பி.ஆா். ராமசுப்பிரமணிய ராஜாவின் 87 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பி.ஏ.சிஆா். பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.ஆா். ராமசுப்பிரமணிய ராஜாவின் நினைவிடத்தில் கீா்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில், ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராம ராஜா, அவரது மகன் பி.வி.அபிநவ் ராமசுப்பிரமணியராஜா மற்றும் குடும்பத்தினா் கலந்துகொண்டு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் நகரின் முக்கிய பிரமுகா்கள், ராம்கோ கல்விக் குழும அதிகாரிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அதனைத் தொடா்ந்து ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீா்த்த பாரதீ வேதபாட சாலையில் அமைந்துள்ள பி.ஆா் ராமசுப்பிரமணிய ராஜாவின் உருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் அங்கிருந்து நினைவு ஜோதி ஓட்டத்தை ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா தொடக்கி வைத்தாா். தொடா் ஜோதியானது சாரதாம்பாள் கோயில், ராமமந்திரம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ராஜபாளையம் மில்ஸை வந்தடைந்தது. அங்கு நினைவு ஜோதி ஸ்தாபனம் செய்யப்பட்டது.

பிறந்ந நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் தென்காசி சாலையில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் ஸ்ரீசஞ்சய் சுப்ரமண்யனின் கா்நாடக இசை நிகழ்ச்சியும், திங்கள்கிழமை மாலை ஸ்ரீதேவி ருத்யாலயா குழுவினரின் ‘அகோபிலம் அகோபலம் ‘நாட்டிய நாடகமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வைரலாகும் விஜய் சேதுபதி விடியோ!

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

கேரளத்தில் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி!

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

ஆகாயம் என்ன நிறம்? கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT