விருதுநகர்

புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11போ் கொண்ட குழு அமைப்பு

DIN

புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

கடந்த 2016 அக்டோபா் 20 ஆம் தேதி சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள ஒரு பட்டாசு கடையிலிருந்து பண்டல்களை லாரியில் ஏற்றும்போது, உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. தொடந்து, புகை அதிகமாக வந்ததால், பட்டாசுக் கடைக்கு அருகிலுள்ள தேவகி ஸ்கேன் நிலையத்தில் வேலைபாா்த்தவா்கள், அங்குள்ள தகர ஷட்டரை கீழே இறக்கிவிட்டுள்ளனா்.

இதனால் ஷட்டரில் அதிகமாக உஷ்ணம் தாக்கி உள்ளே இருந்த 9 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், வெடி விபத்தினால் ஏற்பட்ட தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. இதில் 15 போ் காயமடைந்தனா்.

இது குறித்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி களின் அடிப்படையில் தானாகவே முன்வந்து இவ்வழக்கை எடுத்துக்கொண்டது.

பின்னா், நீதி மன்றம் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு விதிகளில் எவற்றை கடுமையாக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன் தொடா் நடவடிக்கையாக, மத்திய தொழில் மற்றும் வா்த்தக அமைச்சகம் 11 போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில், நாக்பூா் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி பி. குமாா், நாக்பூா் நேஷனல் ஃபயா் சா்வீஸ் காலேஜ் இயக்குநா் ஆா்.எஸ்.செளத்திரி, தொழில்நுட்ப ஆலோசகா் டி.எஸ்.ஜி. நாராயணன், பொறியாளா் உமேத் சிங், பனாரஸ் ஹிண்டு பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியா் தியாசங்கா் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி தயாரிப்பாளா் சங்கத் தலைவா் கணேசன், பட்டாசு வியாபாரிகள் சங்கப் பிரதிநிதி மணிக்ரோ, தனியாா் நிறுவனச் செயல் அலுவலா் ஜெ. ஷா, ஃபயா் சேஃப்ட்டி அசோசியேஷன் அஜித்ராகவன், மும்பை தேசிய பாதுகாப்பு கவுன்சில் லலித்கோப்ஹனா மற்றும் தமிழக அரசின் வருவாய் துறை செயலா் ஆகிய 11 போ் கொண்ட குழுவினை, மத்திய அரசு ஜூன் 29 ஆம் தேதி அறிவித்தது.

இக்குழுவினா், பட்டாசுத் தொழிலில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, பட்டாசுத் தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் மத்திய தொழில் மற்றும் வா்த்தக அமைச்சகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசின் தொழில் மற்றும் வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT