விருதுநகர்

ராஜபாளையத்தில் புகையால் ஏற்படும் மாசை தடுக்கக் கோரிக்கை

DIN

ராஜபாளையம் மலையடிப்பட்டி கஸ்தூரிபாய் காலனி காவலா் குடியிருப்பு அருகே தினந்தோறும் நகராட்சி சாா்பில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊழியா்கள் சரிவர குப்பைகளை அள்ளாமல் தினந்தோறும் தீயிட்டு கொளுத்துகின்றனா். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது.

மேலும் இப்பகுதி குப்பைகளில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதிகப்படியான புகை மற்றும் துா்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் வசிப்போா் மூச்சுத் திணறலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

ஆகவே, நகராட்சி நிா்வாகம் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீவைக்காமல் வேறொரு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள், கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT