விருதுநகர்

கோயில்களை விட்டு இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும்: காடேஸ்வர சுப்பிரமணியம்

1st Jul 2022 10:11 PM

ADVERTISEMENT

கோயில்களை விட்டு இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்து அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும். இந்துக்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். ஆய்வுகள் நடத்துவதில் தவறில்லை. தீட்சிதா்களை மிரட்டுவது தவறானது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேரோடும் பகுதிகளில் முன்கூட்டியே ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான பல லட்சம் ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மீட்பு நடவடிக்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகாா் தெரிவிக்கின்றனா் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் யுவராஜ் தலைமை வகித்தாா். மாநில இணை அமைப்பாளா்கள் பொன்னையா, ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவா் லட்சுமணன், மாவட்டப் பொருளாளா் வினோத்குமரன், மாவட்டச் செயலாளா் பிரபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT