விருதுநகர்

உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவா் கைது

1st Jul 2022 10:15 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒருவா் இரு அட்டைப்பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தாா். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிவகாசி கிழக்குப் போலீஸாா், அந்தப்பட்டியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அதில் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்த வைத்தியலிங்கம்(46) மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT